அரசுப்பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஸ் - ஆசிரியர் மலர்

Latest

03/11/2023

அரசுப்பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

anbil.JPG?w=400&dpr=3

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை அரசுப் பள்ளிகளில் அந்தத் தேர்வுக்கான பயிற்சிகள் தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


தஞ்சாவூர் காந்திஜி சாலையில் தனியார் துணிக்கடையை வெள்ளிக்கிழமை காலை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். இருந்தாலும் அதுவரை பள்ளிகளில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் சிறப்புப் பயிற்சி நடைபெறும்.  ஏனென்றால் அரசுப் பள்ளி மாணவர்களால் வெளியே தனியாரிடம் ரூ. 2 லட்சம், ரூ. 3 லட்சம் செலுத்தி பயிற்சி பெற முடியாது. மாணவர்களின் நிதி சுமையைக் குறைப்பதற்காக பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.


நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பள்ளிகளில் மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவது தவறு இல்லை என நீதிமன்றமே கூறியுள்ளது. அரசு தங்களது கருத்துகளை இதுபோன்று வெளிப்படுத்துவதில் தவறில்லை எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது என்றார்.

1 comment:

  1. அரசு பள்ளியில் 1-12 வரை தமிழ் வழியில் படித்து இரண்டாம் முயற்சியில் நீட் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற ஜீவ குமாா் என்ற மாணவர் அளித்த அறிக்கையில் ” நான் 1-12 வகுப்புகள் தமிழ் வழியில் படித்தேன். புத்தக கடைகளில் நீட் தோ்விற்கான வழிகாட்டி புத்தகங்கள் ஆங்கிலத்தில் நிறைய கிடைக்கிறது.தமிழில் இல்லை. ஆங்கில புத்தகங்ளை தமிழில் மொழிபெயா்த்து படிக்க என்னால் இயலவில்லை. அதனால் முதல் முயற்சியில் தோல்வி அடைந்தேன்.பிறகு எனது ஆசிரியா்கள் ஆங்கிலப்புத்தகங்களை தமிழில் விளக்கி எனக்க பாடம் நடத்தினார்கள். நான் நீட் தோ்வில் அரசு பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்று தோ்ச்சிப் பெற்றேன். Errorless physics, Errorless Chemistry, Errorless Biology, Objective Physics by Dr. Mahesh Jain இவைகள் சிறந்த புத்தகங்களாக கருதப்படுகிறது.இந்த புத்தகங்களை தமிழல் தகுதி வாய்ந்த பேராசிரியா்கள் கொண்டு நடத்தி வீடியோக்களாக பள்ளிக்கல்வி வலைதளத்தில் வெளியிட்டால் மாணவர்கள் சுலபமாக பயிற்சி மையத்திற்குச் செல்லாமல் நீட் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெறுவார்கள்” ஜீவகுமாரின் அறிக்கை முக்கியமானது.பட்டறிவின் வெளிப்பாடு. உடனே நிறைவேற்ற வேண்டும்.வீடியோக்களில் குறைந்த நேரத்தில் அதிக தகவல்களை கொடுக்கும் வகையில் ஆசிரியா் தோன்றி கரும்பலகையில் எழுதக் கூடாது. வரிகள் வரிசையாகத் தோன்றிக்கொண்டேயிருக்க வேண்டும். ஆசிரியா் குரல் ஓசை கேட்க வேண்டும். இப்படி வீடியோ தயாரித்தால் குறைந்த நேரத்தில் அதிக தகவல்களை வழங்க முடியும். அடிப்படை பாடங்கள்முதல் நடத்தப்பட வேண்டும். அதாவது மத்திய அரசு பாடத்திட்டத்தில் 6-12 பாடங்கள் நடத்த வேண்டும். அரசு ஆவன செய்ய வேண்டுகிறேன்

    ReplyDelete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459