மிக கனமழை பெய்ய உள்ளதால் தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்! - ஆசிரியர் மலர்

Latest

03/11/2023

மிக கனமழை பெய்ய உள்ளதால் தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

IMG_20231103_130805

மிக கனமழை பெய்ய உள்ளதால் தமிழகத்திற்கு வானிலை ஆய்வு மையம் நாளை ஆரஞ்சு நிற அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. மேலும், இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல தெற்கு வங்கக் கடல் பகுதியலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.


இதன் காரணமாக தமிழகத்திற்கு வரும் 6ம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு நிற அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு; நாளை 3 மாநிலங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459