தமிழ்நாடு தொடர்பான அறிவிப்புகள், திட்டங்கள், நிலைப்பாடுகள்! - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/02/2026

தமிழ்நாடு தொடர்பான அறிவிப்புகள், திட்டங்கள், நிலைப்பாடுகள்!

 

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள், அறிவிப்புகள் என்னென்ன என்பதை செய்திக்கதிர் தொகுத்துள்ளது. அவற்றை விரிவாக பார்க்கலாம்.


*💼 அறிவிப்புகள்*


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம்

உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.


ஆதிச்சநல்லூரில்

தமிழரின் பழமையான கலாசார செழுமையை விளக்கும் கலாசார மையம் அமைக்கப்படும்.


தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசாவில் அரிய வகை தாது (Rare Minerals) வழித்தடங்கள் அமைக்கப்படும்.


தமிழ்நாடு, கேரளா, ஒடிசாவில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய மையங்கள் அமைக்கப்படும்.


தமிழகத்தில் அரிய வகை கனிமங்களை எடுக்க மத்திய அரசு தேர்வு செய்திருப்பது ஒரு முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.


சென்னை – பெங்களூரு

அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும்.


சென்னை – ஐதராபாத்

அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும்.


ஹைதராபாத் – சென்னை வளர்ச்சி வழித்தடமாக அதிவேக ரயில் பாதை உருவாக்கப்படும்.


ஒடிசா மாநிலம் தால்ச்சர் முதல் தமிழ்நாட்டின் ஆம்பூர் வரை புதிய நீர்வழிப்பாதை அமைக்கப்படும்.


சென்னை மெட்ரோ ரயில் – இரண்டாம் கட்டப் பணிகளுக்கு

மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது; இது மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும்.


சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை மற்றும்

கிழக்கு கடற்கரை சாலை (ECR) விரிவாக்கம் போன்ற

பெரிய சாலைத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.


பழவேற்காடு ஏரியில்

சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில்

3 இடங்களில் பறவைகள் பார்வையிடும் மையங்கள் அமைக்கப்படும்.


தமிழ்நாட்டின் பொதிகை மலையில் மலையேற்ற மற்றும் இயற்கை சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படும்.


முந்திரி உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்கள் தமிழ்நாடு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டில் ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் வகையில்

ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும்.


தமிழ்நாட்டுக்கு பயனளிக்கும் வகையில் மகாத்மா காந்தி கைத்தறித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில்

500 அணைகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.


தமிழகம் உள்பட நாடு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு

மகளிர் விடுதி அமைக்கப்படும்.


குலசேகரப்பட்டினத்தில் உள்ள இஸ்ரோ ஏவுதள பணிகளை வேகப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது; இது தென் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.


*🏛️ நிதி பகிர்வு – தமிழ்நாடு தொடர்பான நிலை*


மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு வழங்க வேண்டும் என்று

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.


அந்த கோரிக்கை மத்திய பட்ஜெட் 2026–27ல் ஏற்கப்படவில்லை.


16ஆவது நிதிக்குழு பரிந்துரைகளின்படி,

மாநிலங்களுக்கான வரி பகிர்வு 41% ஆகவே தொடரும் என்று

மத்திய அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459