நடப்பு கல்வியாண்டில் சுழற்சி முறையில் வகுப்புகள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

நடப்பு கல்வியாண்டில் சுழற்சி முறையில் வகுப்புகள்


வேலூர்: 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை நடப்பு கல்வி ஆண்டில் முப்பருவ பாட முறையை ரத்து செய்வதுடன், பருவ தேர்வையும் ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. கொரோனா ஊரடங்கு தொடர்வதால் பள்ளி பாடங்களை குறைக்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வு குழு தனது 2ம் கட்ட அறிக்கையை, இந்த வார இறுதியில் தாக்கல் செய்ய உள்ளனர். அதில், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ பாடம் மற்றும் தேர்வுகளை ரத்து செய்யும்படி பரிந்துரை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, காலாண்டு அல்லது முதல் பருவத்தேர்வு வழக்கமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடக்கும். கொரோனா நெருக்கடி சூழலில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம்தான் திறக்கும் சூழ்நிலை உள்ளது
. எனவே, முதல்பருவ பாடங்களை தனியாக நடத்த முடியாது. எனவே, பருவத் தேர்வு மற்றும் அதற்கான பாட முறையை ரத்து செய்து விட்டு, பொதுவாக முக்கிய பாடங்கள் மற்றும் அடிப்படை தேவைக்கான கல்வியை வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பழைய முறைப்படி, இறுதியாண்டு தேர்வில், அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகளை இடம் பெற செய்யலாம். இதுதவிர காலை, மாலை என இரண்டு வேளை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட  பரிந்துரைகளும் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a comment