விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 11,127 அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
இணையதளச் செய்திப் பிரிவு
Updated On : 11 மே 2026, 3:33 pm IST
ரயில்வேயில் அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரயில்வேயில் அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணி - RRB Chennai
பகிர்:
மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 11,127 அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 15 முதல் ஜூன் 14-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது பற்றிய விபரம் வருமாறு:
பணி்: Assistant Loco Pilot (ALP)
Advertisement
காலியிடங்கள்: 11,127 (விரைவில் ரயில்வே மண்டலங்கள் வாரியாக காலியிடப்பகிர்வு ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்படும்).
சம்பளம்: மாதம் ரூ.19,900
வயதுவரம்பு: 1.7.2026 தேதியின்படி பொதுப் பிரிவினர்கள் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினர்களுக்கு ரயில்வே விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று Fitter, Electrician, Instrument Mechanic,Mill Wright,Maintenance Mechanic,Electronics, Radio & TV Mechanic,Wireman, Turner, Machinist, Refrigeration & Air Conditioning போன்ற ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Mechanical, Electrical,Electronics,Automobile போன்ற பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் டிப்ளமோ அல்லது பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு எனப்படும் ஆன்லைன்வழி எழுத்துத்தேர்வு, மருத்துவத் தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வில் கேள்விகள் 10 ஆம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரம் ஆகியவை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கேள்விகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் கேட்கப்படும். இதில் ஏதாவதொரு மொழியை தேர்வு செய்து தேர்வை எழுதலாம். எழுத்துத்தேர்வு பற்றிய விபரம் இ-நுழைவுச்சீட்டு மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ளும் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகளுக்கு ரூ.250. இதர பிரிவினர்களுக்கு ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும
*ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:* 15.5.2026 முதல் 14.6.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
www.rrbchennai.gov.in
www.rrbchennai.gov.in


No comments:
Post a Comment