நலவாரியங்களில் சேர இணையதளம் மூலம் பதிவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

நலவாரியங்களில் சேர இணையதளம் மூலம் பதிவு


இணையதளம்
தேனி:
தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குலசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட 17 நல வாரியங்கள் இயங்கி வருகின்றன. இந்த வாரியங்களில் தேனி மாவட்ட தொழிலாளர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்ய மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டியது இருந்தது.
இதற்கிடையே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாகவும், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவும் நலவாரியத்தில் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்ய மாவட்ட தொழிலாளர் நல வாரியத்துக்கு நேரில் வருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சிரமத்தை போக்கும் வகையில் தேனி மாவட்ட தொழிலாளர்கள், அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இணையதளத்தின் மூலம் பதிவு செய்யும் வசதி தொழிலாளர் துறையால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, தொழிலாளர்கள் https://labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களின் பெயர், விவரங்களை உள்ளடு செய்து உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a comment