பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை


தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கொரோனா நிவாரண உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது குறித்து எந்தக் குழப்பமும் வேண்டாம் என்றார். அத்துடன் தனியார்ப் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
முதலமைச்சர் அனைத்து துறையினருடன் இணைந்து ஆலோசனை செய்த பின்னர்தான் தேர்வுகள் சம்பந்தமான அட்டவணைகள் வெளியிடப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
10ஆம் வகுப்புத் தேர்வுகள் எழுதுவதற்காக 3 நாட்கள் விடுதிகள் திறக்கப்படும் எனவும், மாணவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவித்தார்.
12,864 மையங்களில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வுகளை எழுதவுள்ளதாகவும் கூறினார். மேலும், தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a comment