பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய மனிதவள அமைச்சகத்திற்கு என்சிஇஆர்டி சமர்ப்பித்த பரிந்துரைகள் - ஆசிரியர் மலர்

Latest

29/05/2020

பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய மனிதவள அமைச்சகத்திற்கு என்சிஇஆர்டி சமர்ப்பித்த பரிந்துரைகள்



பள்ளிகள் திறப்பது குறித்த மத்திய மனிதவள அமைச்சகத்திற்கு என்சிஇஆர்டி தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.

 அதில், *மண்டல வாரியாக பள்ளிகளை திறக்கலாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.*

என்சிஇஆர்டியின் பரிந்துரைகள்:

*முதற்கட்டமாக வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் பள்ளிகளை திறக்கலாம்.*

*8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதிக்கலாம்.*

*வகுப்பறையில் அதிகபட்சம் 15-20 மாணவர்களே இருக்க வேண்டும்.*

 *30% மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.*

*வகுப்பறையில் மாணவர்கள் அமர்வதில், 6 அடி தனிநபர் இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.*

*காலையில் பொது பிரார்த்தனை நடத்தக் கூடாது.*

*அனைத்து மாணவர்கள் மாஸ்க் அணிந்தே இருக்க வேண்டும்.*

*பெற்றோர்கள் யாரும் பள்ளி வளாகத்திற்கு வரக்கூடாது.*

 இவ்வாறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே பள்ளிகள் ஜூலை 15ம் தேதிக்குப் பிறகு அல்லது ஆகஸ்ட், செப்டம்பரில் திறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459