பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/06/2025

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு அறிவிப்பு.

 பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் பெற மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு நடத்துவது போல் சில பாடங்களில் தேர்ச்சி பெறாதா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார தேவையை அறிந்து அரசின் அனைத்து துறைகளின் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி, மாணாக்கர்களின் மீது தனி அக்கறை கொண்டு உயர் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணாக்கர்களின் கல்வித் தரத்தை செம்மைபடுத்தி வருகிறது. ஏழை, எளிய மாணாக்கர்கள் கல்வி பயின்று, தகுந்த வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் பல்வேறு நிலையில் தொழிற்சார் பயிற்சியினை வழங்கி வருகிறது.ஏப்ரல், 2025-இல் நடைபெற்ற பட்டயத் தேர்வுகளில் இறுதி பருவம் / துணைத் தேர்வினை எழுதிய பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் நிலுவை வைத்துள்ளனர். அம்மாணாக்கர்கள் அடுத்த நிலையான உயர் கல்வி பயிலவோ அல்லது வேலை வாய்ப்பிற்கோ செல்ல இயலாமல் இருக்கும் சூழ்நிலையினை போக்க தமிழ்நாடு முதலமைச்சர் மேற்படி மாணாக்கர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்க ஏதுவாக ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வின் (Special Supplementary Examination) மூலம் தேர்ச்சி பெறாமல் உள்ள நிலுவைப் பாடங்களை எழுத வாய்ப்பு வழங்கிட அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி இம்மாணாக்கர்களுக்கு தற்பொழுது ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.இது குறித்த விவரங்கள் அனைத்தும் https://dte.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தின் வாயிலாக மாணாக்கர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள கால அட்டவணையின்படி விண்ணப்பிக்கலாம்.

10-48


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459