Education qualification: இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Age limit: இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01-01-2025 அன்று வயது 18க்கு மேலும், 23க்கு கீழும் இருக்க வேண்டும். பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் 5 ஆண்டுகள் வரை சலுகை அளிக்கப்படும். ஓபிசி பிரிவினர் 3 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Exam method: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, விரிவான மருத்துவப் பரிசோதனை ஆகிய நிலைகளில் தேர்வு முறை இருக்கும். எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த உயர்ந்தபட்ச மதிப்பெண்கள் அடிப்படையிலும், ஆயுதப் படைகளின் விருப்பங்கள் படியும் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
இதற்கான தேர்வு வினாத்தாள்கள் இப்போது இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்புரி மற்றும் கொங்கனி மொழிகளில் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் அறிவிப்பு CLICK HERE



No comments:
Post a Comment