TNPSC பல தேர்வுகள் நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை நியமித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளை எழுதி அரசுப் பணி வாய்ப்பினைப் பெறுவதையே லட்சியமாகக் கருதி லட்சக்கணக்கான இளைஞர்கள் தயாராகின்றனர். அப்படி பல லட்சம் இளைஞர்களும் ஆர்வமுடன் காத்திருந்த, அரசுப் பணிக்கான இந்த ஆண்டின் கடைசித் தேர்வான குரூப் 2, 2ஏ தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
தற்போது இந்த தேர்வெழுதும் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த குரூப் 2 தேர்வின் மூலம் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை II, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட 507 பணியிடங்களும், 2ஏ தேர்வின் மூலம் உதவி ஆய்வாளர், உதவியாளர், வருவாய் உதவியாளர்,
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
கணக்கர் உள்ளிட்ட 1,820 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 2,327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக 7 லட்சத்து 93 ஆயிரத்து 947 பேர் தேர்வெழுத உள்ளனர். வழக்கமாக குரூப்4 தேர்வையே அதிகளவிலானோர் எழுதுகின்றனர். அதற்கு காரணம் பெரும்பாலானோர் மற்ற தேர்வுகளை விட குரூப்4 தேர்வு தான் எளிதானது என எண்ணுவது தான். ஆனால் குரூப் 4 தேர்வை விட குரூப் 2 தேர்வு தான் எளிமையானது. அதுவும் இல்லாமல் இந்த ஆண்டு குரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்குக் கூடுதல் சாதகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தூத்துக்குடி சுரேஷ் அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் கூறுகையில், “குரூப் 2 தேர்வு இரண்டு கட்ட தேர்வுகளாக நடைபெறும் முதலில் பிரிலிமினரி தேர்வு நடைபெறும். இந்த பிரிலிமினரி தேர்வில் பாஸ் ஆனவர்கள் அதன் பிறகு இரண்டு வகையான மெயின்ஸ் தேர்வினை எழுதுவார்கள். அதாவது குரூப் 2 மற்றும் 2ஏ என இரண்டு வகையான தேர்வுகள் எழுதுவார்கள்.
பிரிலிமினரி மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து குரூப் 2 மெயின்ஸ் மற்றும் குரூப் 2ஏ மெய்ன்ஸ் தேர்வு
நடைபெறும், குரூப் 2 மெயின்ஸ் தேர்வானது உயர் பதவிக்கான விளக்க வகை தேர்வும் மற்றும் மற்றொன்று குறைந்த பதவிக்கான ஆப்ஜெக்டிவ் வகை தேர்வாக நடைபெறும்.
மேலும் இந்த ஆண்டு குரூப் 2 தேர்வுக்கு நேர்காணல் இல்லை. இதனால் நீங்கள் மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றால், உங்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைத்துவிடும். இது இந்த ஆண்டு தேர்வெழுதும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
பெரும்பாலான மாணவர்கள் குரூப் 2 தேர்வினை மிக கடினம் என்று நினைத்திருக்கின்றனர். ஆனால் குரூப் 2 தேர்வானது கடினமல்ல குரூப்-4 தேர்வை ஒப்பிட்டால் குரூப் 2 தேர்வானது எளிதாகத் தான் இருக்கும். கடந்த ஆண்டு எடுத்துப் பார்த்தால் குரூப் 4இல் தேர்ச்சி பெறாதவர்கள் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.
இதன் காரணம் என்னவென்று பார்த்தால் குரூப் 4 தேர்வானது ஒற்றை நிலை தேர்வாகும் அதனால் cut off மதிப்பெண் அதிகமாகக் காணப்படும். மேலும் அது ஒற்றை நிலை தேர்வு என்பதால் ஏராளமானோர் தேர்வினை எழுதுவார்கள், அதனால் போட்டியும் அதிகமாக இருக்கும்.
இதன் காரணம் என்னவென்று பார்த்தால் குரூப் 4 தேர்வானது ஒற்றை நிலை தேர்வாகும் அதனால் cut off மதிப்பெண் அதிகமாகக் காணப்படும். மேலும் அது ஒற்றை நிலை தேர்வு என்பதால் ஏராளமானோர் தேர்வினை எழுதுவார்கள், அதனால் போட்டியும் அதிகமாக இருக்கும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் அறிவிப்பு CLICK HERE
No comments:
Post a Comment