வங்கி கணக்கில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? - ஆசிரியர் மலர்

Latest

13/04/2024

வங்கி கணக்கில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?

 

நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக பாரத் ஸ்டேட் வங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தனது சிறப்பான சேவைகள் மூலம் ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு ஆன்லைன் சேவைகளையும் எஸ்பிஐ வங்கி வழங்கி வருகிறது.

அதன்படி எஸ்பிஐ வங்கியில் கணக்கு தொடங்குவது முதல், வங்கி கடன் செலுத்துவது, பண பரிவர்த்தனை என அனைத்தையும் ஆன்லைனிலே செய்துவிடலாம். அதுமட்டுமன்றி வெறும் 5 நிமிடங்களில் எஸ்பிஐ வங்கியில் உங்களால் வங்கி கணக்கும்  தொடங்க முடியும்.

மொபைல் எண்ணை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? 

நீங்கள் வங்கி கணக்குடன் இணைத்த மொபைல் எண்ணை மாற்றிவிட்டால், மிக எளிதாக ஏடிஎம் மூலம் புதிய மொபைல் எண்ணை எஸ்.பி.ஐ வங்கி கணக்குடன் இணைத்துக்கொள்ளலாம்.

ஏடிஎம் மூலம் மொபைல் எண்ணை மாற்ற கீழ்காணும் முறையை பின்பற்றுங்கள் : 

  1. உங்களுக்கு அருகிலிருக்கும் எஸ்பிஐ ஏடிஎம் மையத்திற்கு சென்று, Registration என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

  2. பின்னர் உங்கள் ஏடிஎம் பின் நம்பரை பதிவிட்டு, Mobile Number Registration என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

  3. இப்போது திரையில் தோன்றும் Change mobile number ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

  4. பின்னர் பழைய நம்பரை பதிவிட்டு Enter கொடுத்துவிட்டு பிறகு புதிய மொபைல் எண்ணை பதிவிட்டு Confirm கொடுக்கவும்.

  5. இப்போது உங்கள் புதிய மற்றும் பழைய மொபைல் எண்களுக்கு OTP வரும். அத்துடன் மெசேஜ் ஒன்றும் வரும். அதை வைத்து 4 மணி நேரத்திற்கும் உங்கள் மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459