இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு குறித்து, இன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக, 2009 ஆகஸ்ட் 1க்கு முன் நியமிக்கப்பட்டோருக்கும், அதற்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கும் சமமான ஊதியம் வழங்க, இடைநிலை ஆசிரியர் பதிவுமூப்பு இயக்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து, அரசு தரப்பில் பேச்சு நடத்தி, சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக ஆய்வு செய்ய, அரசின் சார்பில் கமிட்டி அமைக்கப்பட்டது.
கமிட்டி சார்பில், பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, இன்று ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த உள்ளார்.
தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க பிரதிநிதிகள், இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment