பொது தேர்வு எழுதும் மாணவர்களில் வருகையினை தேர்வு நாட்களில் இணையத்தில் பதிவேற்ற உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




10/03/2023

பொது தேர்வு எழுதும் மாணவர்களில் வருகையினை தேர்வு நாட்களில் இணையத்தில் பதிவேற்ற உத்தரவு.

 தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு வரும் 13ம் தேதியும்; பிளஸ் 1 பொது தேர்வு 14ம் தேதியும் துவங்குகின்றன. தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.


இந்நிலையில், தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா சுற்றறிக்கை:


பொது தேர்வு நடக்கும் ஒவ்வொரு நாளும், தேர்வில் பங்கேற்ற மாணவர்கள், 'ஆப்சென்ட்' ஆனவர்கள் உள்ளிட்டோர் விபரங்களை, அரசு தேர்வுத்துறையின், www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வு கண்காணிப்பு பணியில் உள்ள ஆசிரியர்கள் பதிவேற்ற வேண்டும்.


மாற்று திறனாளி சலுகை பெற்றவர்களின் விபரங்களையும், ஒவ்வொரு தேர்வு நாளிலும், இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459