சிபில் என்பது கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட் (Credit Information Bureau India Ltd) என்பதன் சுருக்கம் ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான சிபில், தனிநபர்களின் வங்கிப் பர்வர்த்தனைகள் மற்றும் கடன் திரும்ப செலுத்துதல் ஆகியவற்றை வைத்து கிரெடிட் ரிப்போர்டுகளை வழங்கும். ஒருவர் முன்பு வாங்கிய கடன்கள் மற்றும் அதனை திரும்ப செலுத்திய விதம் ஆகியற்றை அடிப்படையாக வைத்து சிபில் ஸ்கோர்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே ஒருவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்கான சாத்தியம் எவ்வளவு என்பதை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் அறிந்து கொள்கின்றன. பொதுவாக 600க்கும் குறைவாக சிபில் ஸ்கோர் இருந்தாலே வங்கிகள் கடன் கொடுக்க யோசிக்கின்றன. ஏனென்றால், கொரோனா வைரஸூக்குப் பிறகு தனிநபர்கள் பல வழிகளில் நிதிச் சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு ஒருவரின் கடன் தொகையை மற்றும் அவரின் பின்புலத்தை ஆராய்ந்து கடன்கள் வழங்கப்படுகின்றன. இங்கு பிரதானமாக சிபில் ஸ்கோர் இருப்பதால், அதனை கடன் வாங்கும் முன் நீங்களே செக் செய்து கொள்ளுங்கள். உங்களின் சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால் கடன் எளிதாக கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். சிபில் ஸ்கோரை ஆன்லைனில் எப்படி தெரிந்து கொள்வது? என்று. கூகுள் இருக்கும்போது உங்களுக்கு என்ன கவலை? எளிமையாக சிபில் ஸ்கோரை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் உங்களின் சிபில் ஸ்கோரை செக் செய்ய விரும்பினால், முதலில் இணைய பக்கத்துக்கு செல்லவும். அங்கு Get your CIBIL Score என்கிற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் FAQ செக்ஷனுக்கு சென்று How much do I need to pay to get a CIBIL Credit Report? என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்களுக்கு Free CIBIL Credit Report விருப்பம் இருக்கும். அதனை நீங்கள் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் Get Your Free CIBIL Score ஆப்சன் வரும். ஏற்கனவே சிபில் ஸ்கோர் பக்கத்தில் உங்களுக்கு கணக்கு இருந்தால் உடனடியாக சிபில் ஸ்கோரை பெற்றுவிடலாம். இப்போது தான் புதிதாக சிபில் ஸ்கோர் பக்கத்துக்கு செல்கிறீர்கள் என்றால், முதலில் சிபில் ஸ்கோர் பக்கத்தில் உங்கள் கணக்கை ஓபன் செய்ய வேண்டும். பெயர், மின்னஞ்சல், நீங்கள் பயன்படுத்த விரும்பும் அடையாள அட்டை (ஐடி) மற்றும் உங்கள் மொபைல் நம்பர் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும். அடையாள அட்டைக்கு பான் நம்பர், லைசன்ஸ் நம்பர், ரேஷன் கார்டு நம்பர் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு உங்களுக்கு ஓடிபி ஒன்று வரும். அதில் உள்ளிட்ட பிறகு சிபில் கணக்கிற்குள் சென்று dashboard பக்கத்துக்கு செல்லவும். myscore.cibil.com பக்கத்தை கிளிக் செய்தால் லாகின் கேட்கும். உங்கள் தகவல்களை உள்ளிட்ட பிறகு சிபில் ஸ்கோர் திரையில் தோன்றும்.
Post Top Ad
WhatsApp Telegram
CLICK HERE
10/07/2022
சிபில் ஸ்கோரை ஆன்லைனின்இலவசமாக செக் செய்வது எப்படி

Subscribe to:
Post Comments (Atom)
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
No comments:
Post a Comment