IRCTC eWallet பற்றி தெரியுமா...நொடியில் டிக்கெட் முன்பதிவு - ஆசிரியர் மலர்

Latest

10/07/2022

IRCTC eWallet பற்றி தெரியுமா...நொடியில் டிக்கெட் முன்பதிவு

இந்திய ரயில்வே ஐஆர்சிடிசி, டிக்கெட் முன்பதிவு செயல்முறையை எளிதாக்குவதற்கு மக்களுக்கு பல வசதிகளை வழங்குகிறது. இணையதளம் மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவையை வழங்கி வந்த, அதில் இப்போது கூடுதலாக இ-வாலட் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் பயணிகள் எளிதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதுடன், டிக்கெட் தொடர்பான பணத்தையும் உடனடியாக திரும்பப் பெறலாம். ஐஆர்சிடிசி eWallet IRCTC eWallet என்பது யூசர்கள் ஐஆர்சிடிசியில் முன்கூட்டியே பணத்தை டெபாசிட் செய்து அதை கட்டண விருப்பமாகப் பயன்படுத்தக்கூடிய திட்டமாகும். டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அந்த பணத்தை செலுத்தி ஐஆர்சிடிசியில் டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். IRCTC இ-வாலட் நன்மைகள் ஐஆர்சிடிசியின் இ-வால்ட் மூலம் பாதுகாப்பான மற்றும் தொந்தரவு இல்லாத பரிவர்த்தனைகளை நீங்கள் விரைவாக மேற்கொள்ள முடியும். மற்ற தளங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பணம் செலுத்த எடுத்துக் கொள்ள கால அளவைவிட, இதில் மிக குறைவான நொடிகளில் பணம் செலுத்திவிடலாம். ஆன்லைன் மூலம் நீங்கள் டாப்அப் செய்து கொள்ளும் வசதியும் இதில் இருக்கிறது. மறுபுறம், நீங்கள் தட்கலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், வங்கி அல்லது ஆன்லைன் வேலை செய்யவில்லை என்றால், வாலட் மூலம் பணம் செலுத்தலாம். இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை விரைவில் உங்களுக்கு கிடைக்கும். IRCTC இ-வாலட்டின் அம்சங்கள் உங்களுடைய ஆதார் மற்றும் பான் எண் மூலம் உங்களுடைய அக்கவுண்ட் சரிபார்க்கப்படும். பாதுகாப்பு வசதிக்காக ஒவ்வொரு முன்பதிவின்போது ஓடிபி அனுப்பப்படும். இ-வாலட் மூலம் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்துசெய்தால், மறுநாளே உங்கள் IRCTC இ-வாலட் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும். 3 ஆண்டுகள் ஒருவர் டை பயன்படுத்திக் கொள்ளலாம். முன்பதிவு செய்வது எப்படி? IRCTC யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல் மூலம் IRCTC கணக்கை லாகின் செய்ய வேண்டும். அதில் ஆப்சனை தேர்ந்தெடுத்து IRCTC E-Wallet Register Now என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் பான் மற்றும் ஆதார் தகவல்களை கொடுத்து உங்கள் அக்கவுண்டை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ரூ.100 முதல் ரூ.10,000 வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் ஒவ்வொரு முறையும் கூடுதலாக 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459