Airtel vs Jio : ஆயிரம் ரூபாயில் அதிக சலுகைகளை கொடுப்பது யார் - ஆசிரியர் மலர்

Latest

10/07/2022

Airtel vs Jio : ஆயிரம் ரூபாயில் அதிக சலுகைகளை கொடுப்பது யார்


இந்திய டெலிகாம் துறையில் மிகப்பெரிய போர் நடைபெற்று வருகிறது. முன்னணியில் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் புதிய ஆஃபர்களையும், சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கின்றன. ஆனால், இரண்டு நிறுவனங்களும் வழங்கும் சலுகைகள் குறித்த தகவலை பெரும்பாலானோர் பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஒரு விலையில் ரீச்சார்ஜ் திட்டங்கள் இருந்தாலும், இரண்டு நிறுவனங்களின் பிளான்களுக்கும் இடையே ஏதேனும் வித்தியாசம் அல்லது கூடுதல் சலுகை இருக்கும். அந்தவகையில் ஆயிரம் ரூபாயில் அதிக சலுகைகளை கொடுக்கும் நிறுவனம் எவை? என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். ஜியோ நிறுவனம் 1066 ரூபாய் ப்ரீபெய்டு ரீச்சார்ஜ் திட்டத்தை வைத்துள்ளது. ஏர்டெல் 999 ரூபாய்க்கு ஒரு பிளானை வைத்திருக்கிறது. இதில் எதனை வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்தெடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம். ஏர்டெல் ரூ 999 திட்டம் ஏர்டெல்லின் ரூ.999 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தில், தினமும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் டேட்டா பிளான் முடிந்ததும் இணைய வேகம் 64Kbps ஆக குறைந்துவிடும். இதில் அன்லிமிட்டெட் அழைப்புகளை வாடிகையாளர்கள் மேற்கொள்ளலாம். உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் அனைத்தும் இலவசம். தினமும் 100 எஸ்எம்எஸூம் அனுப்பிக் கொள்ளலாம். ஜியோ ரூ.1066 திட்டம் ஜியோவின் ரூ.1066 பிளானும் 84 நாட்கள் செல்லுபடியாகும். தினமும் 2 ஜிபி பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிர, கூடுதலாக 5 ஜிபி டேட்டாவையும் ஜியோ வாடிக்கையாளர்களுக்காக வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தைப் போலவே அன்லிமிடெட் எஸ்டிடி, உள்ளூர் மற்றும் குரல் அழைப்புகளை நாடு முழுவதும் மேற்கொள்ளலாம். கூடுதலாக, டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஜியோடிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் அணுகல் இலவசமாக கிடைக்கும். Disney + Hotstar சந்தா ஒரு வருடம் செல்லுபடியாகும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459