20 ஆம் தேதி தற்காலிக ஆசிரியர் பணிநியமனம் - சனி ஞாயிறு தொடக்க கல்வி கலந்தாய்வு நடத்தப்படுமா? - ஆசிரியர் மலர்

Latest

 




14/07/2022

20 ஆம் தேதி தற்காலிக ஆசிரியர் பணிநியமனம் - சனி ஞாயிறு தொடக்க கல்வி கலந்தாய்வு நடத்தப்படுமா?

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை ஜூலை 19-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று 24 மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் தற்போது இடைநிலை ஆசிரியர் மாவட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 20 ஆம் தேதி தற்காலிக ஆசிரியர் பணியேற்கும் பள்ளியில் மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர் 19 ஆம் தேதியில் சேர்ந்தால் மட்டுமே தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் ஏற்படும் சங்கடங்கள் தவிர்க்கப்படும். 

எனவே வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கலந்தாய்வை நடத்தி முடித்து திங்கள் கிழமை பணிவிடுவிப்பு செய்தால் புதிய பணியிடத்தில் ஒருநாள் இரண்டு நாள் மட்டும் தற்காலிக ஆசிரியர் பணியாற்றி விட்டு மீண்டும் பணியிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459