UKG படிக்கும் சிறுவனுக்கு இப்படியொரு திறமையா - என்னென்ன செய்கிறான் பாருங்கள் - ஆசிரியர் மலர்

Latest

12/06/2022

UKG படிக்கும் சிறுவனுக்கு இப்படியொரு திறமையா - என்னென்ன செய்கிறான் பாருங்கள்


திருச்செங்கோடு அருகே உள்ள சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன் – மனோன்மணி தம்பதி. நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது ஒரே மகன் தக்ஷன். தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். படிப்பில் சுட்டியாக இருக்கும் சிறுவன் தற்போதே தனது சாதனை கணக்கை தொடங்கி விட்டார். ஆங்கிலத்தில் ‘ஏ என்றால் ஏ பார் ஆப்பிள் ; பி என்றால் பி பார் பால்’ வார்த்தைகளை போல ஆங்கிலத்தில் இருக்கும் 26 எழுத்துக்களுக்கும் குறைந்தது பத்து வார்த்தைகளாவது சொல்லி அசத்துகிறார். அதே போல் தமிழில் ’அ என்றால் அம்மா என்று சொல்வது போல’ ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் குறைந்தது 15 வார்த்தைகளாவது வேகமாக சொல்லி அசத்துகிறார். மேலும், 100 பழங்களின் பெயர்கள், 40 வாகனங்களின் பெயர்கள் 20 உடல் பாகங்கள் காய்கறிகள்25, பழங்கள் 35, என சுமார் 800 வார்த்தைகளை தெரிந்து வைத்துள்ளார். இந்நிலையில் சிறுவன் தக்ஷனின் சாதனைகளை அங்கீகரித்து ‘யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ்’ புத்தகத்தில், ’ரெக்டி மோஸ்ட் டாப்பிக்ஸ் நேம் அன்டு ஆப்ஜக்ட்ஸ்’ என்ற பட்டியலில் சிறுவனுக்கு சிறப்பு இடம் கொடுத்துள்ளனர். மேலும் பியூட்சர்கலாம் புக் ஆப் ரிகார்டிலும் இவரது பதிவு செய்யப்பட்டு சான்றுகள், பதக்கங்கள், அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிறுவனின் அசாத்திய திறமையை பார்த்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். சிறுவனின் திறனை கண்டறிந்து சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சித்தது குறித்து சிறுவனின் தாயார் மணோன்மணி கூறியதாவது, ராக்கெட் விண்வெளி குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் எங்கள் மகனை அவர் விரும்பும் துறையில் படிக்க வைப்போம். சாதனை குறித்து செய்திகளை பார்த்த எனது மகன் தானும் இத போல் மெடல்கள் வாங்க வேண்டும் என கூறியதை அடுத்து அவரை நெறிப்படுத்தி ஊக்குவித்து வழிகாட்டினோம் என கூறினார். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459