டிஎன்பிஎஸ்சி பாறுப்பு தலைவராக சி.முனியநாதன் ஐஏஎஸ் நியமனம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

12/06/2022

டிஎன்பிஎஸ்சி பாறுப்பு தலைவராக சி.முனியநாதன் ஐஏஎஸ் நியமனம்


  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக புதிய தலைவராக சி.முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த 9ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து,புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்து வரும் சி.முனியநாதன் பொறுப்புத் தலைவராக செயல்படுவார் என்று மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.டிஎன்பிஎஸ்சி தலைவராக கடந்த 2020ம் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார். தஞ்சாவூரைச் சேர்ந்த பாலச்சந்திரன் வயது அடிப்படையில் கடந்த 9ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்து வரும் சி.முனியநாதன் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ்மரியசூசை ஆகியோர் டிஎன்பிஎஸ்சியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டனர். டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் பணி ஓய்வு பெற்றதை அடுத்து, பொறுப்பு தலைவராக சி.முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்து வரும் சி.முனியநாதன் பொறுப்புத் தலைவராக செயல்படுவார் என்று மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த சி.முனியநாதன் 2010 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். நாகை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர்,தொழிலாளர் நலத்துறை ஆணையர் உட்பட பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்... 

No comments:

Post a Comment