தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

19/05/2022

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?

 தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் ஜூன் இறுதியில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர். 


இந்நிலையில், இம்மாத இறுதி வரை நடைபெறும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் ஜூன் மாதத்தில் திருத்தவுள்ளனர். 


மேலும், ஆசிரியர்கள் பயிற்சி, பள்ளி உள்கட்டமைப்பு மேம்படுத்தல் போன்றவை நடைபெறுவதால், 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாத இறுதியில் பள்ளிகள் மீண்டும் திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459