உங்களுக்கு 2 நாள்தான் டைம்!\" சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில்.. பள்ளி தாளாளருக்கு போலீசார் நோட்டீஸ் - ஆசிரியர் மலர்

Latest

01/04/2022

உங்களுக்கு 2 நாள்தான் டைம்!\" சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில்.. பள்ளி தாளாளருக்கு போலீசார் நோட்டீஸ்


சென்னை: வேன் மோதி சிறுவன் இறந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார்ப் பள்ளிக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், இவரது மகன் தீக்சித் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் தீக்சித் பள்ளி பேருந்தில் பள்ளிக்குச் சென்றுள்ளார். மாணவர் வீட்டில் இருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே, அவரது தாயாரைத் தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகம் மாணவருக்கு விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். விபத்துபேருந்தில் தீக்சித் ஏதோ ஒரு பொருளைத் தவறிவிட்டதாகவும் அதை எடுக்க மீண்டும் பேருந்தில் ஏற முயன்ற போது, தவறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த தீக்சித்தை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்க முயன்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் தீக்சித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.மறுப்புஇந்த சம்பவம் தொடர்பாக முதலில் போலீசார் வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்தனர். இருப்பினும், பள்ளியின் தாளாளரைக் கைது செய்யும் வரை, உயிரிழந்த மாணவர் தீக்சித் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் உயிரிழந்த மாணவரின் பெற்றோருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னரே உடலை வாங்கப் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.முதற்கட்ட விசாரணைஇது தொடர்பாக ஓட்டுநர் பூங்காவனம், பெண் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முதற்கட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார், அதில் ஓட்டுநர் கவனக்குறைவாகச் செயல்பட்டது தெரிய வந்துள்ளது, அதுமட்டுமின்றி இந்த நிகழ்வின் போது சம்பந்தப்பட்ட பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பள்ளியில் இல்லாததும் ஒரு காரணம் என்று விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.நோட்டீஸ்இந்தச் சூழலில் வேன் மோதி சிறுவன் இறந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார்ப் பள்ளிக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பள்ளி தாளாளருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மொத்தம் 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து கேள்விகளுக்கும் அடுத்த 2 நாட்களில் விளக்கம் அளிக்கும்படி பள்ளி தாளாளருக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459