தற்போது கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டு வரும் நிலையில், கல்லூரிகளில் பருவத் (செமஸ்டர்) தேர்வுகள் இணையவழியில் இல்லாமல் நேரடியாக தேர்வு மையங்களில் நடத்த கல்லூரி நிர்வாகங்கள் முடிவெடுத்துள்ளன. இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான பருவத் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இதற்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான அனைத்துத் தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்புக்கான பருவத் தேர்வு டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து தமிழ்கத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக்காலத்தையொட்டி இடையில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment