பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களை, மே மாதம் நீட்டிக்க வேண்டாமென, அரசாணை வெளியிட்டு மூன்று ஆண்டு தாமதத்துக்கு பின் தற்போது நடை முறைக்கு வந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை கூடுதல் நிதியிழப்பை கட்ஏடுப்படுத்த, கல்வித்துறை தணிக்கை பிரிவு சார்பில், பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, மே மாதம் நீட்டிப்பு வழங்க வேண்டாமென பரிந்துரைக்கப்பட்டது. இதனடிப்படையில் - 2022, ஜூன் 28ம் தேதி, அரசாணை (எண்:115) வெளியிடப்பட்டது.
இதில், பணி ஓய்வு பெறுவோர், அக்கல்வி யாண்டில் தேர்வுப்பணிகள் முடியும் வரை மட்டும் பணி நீட்டிப்பு வழங்கு மாறு தெரிவிக்கப்பட்டது.
இந்த அரசாணை வெளி யான பிறகு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகத்தில் இருந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பிரத்யேக செயல்முறைகள் அனுப்பப்படவில்லை. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக, மே மாத ஊதியத்துடன்தான், மாநிலம் முழுக்க ஆசிரியர்கள் பணி நிறைவு பெறுகின்றனர்.
இதுகுறித்து, கல்வியாளர்கள் சிலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2025, ஜூன் 13ம் தேதி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மே மாதம் பணி நீட்டிப்பு செய்ய வேண்டாமென, செயல்முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நிதியிழப்பை விதிமுறைகளை செயல்படுத்த, மூன்று ஆண்டுகள் கால தாமதமாகியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவர்களிடம் கேட்டபோது, "அரசாணையை அமல்படுத்துவதில், ஆசிரியர்களுக்கு நிலவிய சந்தேகங்கள் அடிப்படையில், அரசிடம் விளக்கம் பெற சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படை யில், 30.5.2025ல் விளக்கம் பெறப்பட்டதால், செயல்முறைகள் சி.இ.ஓ.,க்களுக்கு அனுப்பப்பட்டன,” என்றார்.



No comments:
Post a Comment