அரசு பள்ளி பெருமையின் அடையாளம் : மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் - ஆசிரியர் மலர்

Latest

16/11/2021

அரசு பள்ளி பெருமையின் அடையாளம் : மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள்


அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். 

குழந்தைகள் தினவிழா 

கோவை சரவணம்பட்டி ஷாஜகான் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா வரவேற்றார். இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்கள். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது கூறியதாவது:- 

பெருமையின் அடையாளம் 

குழந்தை பருவம் என்பது, எந்த ஒரு பயமும் இல்லாமல் இருப்பது ஆகும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் எண்ணங்களுக்கு ஏற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். மேலும் அவர்களின் லட்சியம் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்குண்டான வழிமுறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்தும் விதமாக பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், கட்டிடங்களையும் கட்டித் தர தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. பெருமையின் அடையாளம் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பணி யாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459