10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் கட்டுப்பாடு - ஆசிரியர் மலர்

Latest

06/04/2024

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் கட்டுப்பாடு

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை மறு நாள் முடிய உள்ளன. இதைத் தொடர்ந்து விடை திருத்தம் தொடர்பாக தேர்வுத்துறை இணை இயக் குனர் நரேஷ் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்ற றிக்கை: அந்தந்த மாவட்ட விடைத்தாள்கள் அந்த மாவட்டத்திலேயே மதிப்பீடு செய்யப்படும். தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களையும்; ஆங்கில வழி ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும். இதில் மாற்றமும் இருக்கக்கூடாது. மதிப்பீட்டு பணிகளை குறிப் பிட்ட நாட்களுக்குள் காலதாமதமின்றி முடிக்க வேண்டும்.


அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி கள் என அனைத்திலும் உள்ள தகுதியான பாட ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தப் பணிக்கு அமர்த்த வேண்டும். ஏப். 11ம் தேதிக்குள் ஆசிரி யர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்


. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


விடைத்தாள் திருத்துவதில் தமிழ் வழி ஆசிரி யர்கள், ஆங்கில வழி தாளையும்; ஆங்கில வழி ஆசிரியர்கள் தமிழ் வழி தாளையும் திருத்துவ தால் மதிப்பெண் பதிவிடுவதில் பல்வேறு குள றுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விடை திருத்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459