நான் ஸ்டாலின் பேசுகிறேன்.. 6ம் வகுப்பு மாணவியின் கடிதம்.. உடனே போன் போட்ட முதல்வர்.. என்ன சொன்னார்? - ஆசிரியர் மலர்

Latest

15/10/2021

நான் ஸ்டாலின் பேசுகிறேன்.. 6ம் வகுப்பு மாணவியின் கடிதம்.. உடனே போன் போட்ட முதல்வர்.. என்ன சொன்னார்?

 


தனக்கு கடிதம் எழுதிய 6ம் வகுப்பு மாணவிக்கு முதல்வர் ஸ்டாலின் போன் செய்து பேசியது வைரலாகி உள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் குறைந்து வருகின்றன. தேசிய அளவில் ஆங்காங்கே கொரோனா கேஸ்கள் அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,259 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 15,451 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.இதை முன்னிட்டு தற்போது தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்துள்ளன. நேற்று அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் இனி வார இறுதி நாட்களிலும் கோவில்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள்அதேபோல் நவம்பர் 1 முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள்  நர்சரி பள்ளிகள்  அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து மாணவி ஒருவர் கடிதம் எழுதி இருந்தார்.கடிதம்ஓசூர் அருகே டைட்டன் டவுன்ஷிப்பைச் சேர்ந்த ரவிராஜன் - உதயகுமாரி ஆகியோரின் மகளான பிரஜ்னா என்ற மாணவிதான் இந்த கடிதத்தை எழுதியது. இவர் அங்கு 6ம் படித்து வருகிறார். வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் உடனே பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பிரஜ்னா இந்த கடிதத்தை எழுதி இருந்தார்.மாணவிஇதையடுத்து பிரஜ்னாவிற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை போன் செய்தார். அந்த கடிதத்தில் இருந்த பெற்றோரின் எண்ணுக்கு போன் செய்து பிரஜ்னாவிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதில் கொரோனா கட்டுப்பாடுகள், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கவலைப்பட வேண்டாம். நவம்பர் 1-ம் தேதி நாள் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.போன்அப்படி பள்ளிகள் திறக்கும் போது நீங்களும் பள்ளிக்கு போகலாம். பள்ளிக்கு செல்லும் போது நீங்கள் கவனமாக செல்ல வேண்டும். முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பாதுகாப்பாக தனிமனித இடைவெளிவிட்டு செல்ல வேண்டும். ஆசிரியர் கூறும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அந்த சிறுமியிடம் அறிவுறுத்தினார். இதையடுத்து முதல்வரிடம் பேசிய மாணவியின் பெற்றோர் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459