இன்றைய ராசிபலன் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

09/06/2021

இன்றைய ராசிபலன்


சென்னை: பிலவ வருடம் வைகாசி 26 ஆம் தேதி ஜூன் 9,2021 புதன்கிழமை. சதுர்த்தசி திதி பகல் 01.58 அதன் பின் அமாவாசை. கிருத்திகை காலை 08.44 மணிவரை அதன் பின் ரோகிணி. சந்திரன் இன்றைய தினம் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. சந்திரன் ராகு, சூரியனுடன் இணைந்து பயணம் செய்யும் இந்த நாளில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம். கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.மேஷம்சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் நல்ல ஆதாயம் உண்டாகும். பேச்சுவார்த்தைகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.ரிஷபம்சந்திரன் உங்கள் ராசியில் ராகு, சூரியன் உடன் பயணம் செய்கின்றன. புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பளு கூடும் உடன் வேலை செய்பவர்களின் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும்.மிதுனம்சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கின்றனர். தொழில் வியாபாரங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மைக்கான வாய்ப்புகள் ஏற்படும். பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.கடகம்ராசி நாதன் சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள்.தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.சிம்மம்சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். மருத்துவம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். தனவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த சில முயற்சிகள் காலதாமதமாக நிறைவேறும். கற்கும் திறன்களில் மாற்றங்கள் உண்டாகும்.உடல் ஆரோக்கியம் மேம்படும். பணியிடங்களில் திறமை பளிச்சிடும்.கன்னிசந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்கிறார். தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் அமைதியின்மையும், ஒருவிதமான போராட்டமும் உண்டாகும்.துலாம்சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் பேச்சில் கவனம் தேவை. அவசரப்பட்டு பேசி விட்டு வருத்தப்பட வேண்டாம். நெருங்கிய நண்பர்களின் மூலம் பிரச்சினைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த சில நிகழ்வுகள் காலதாமதமாக நிறைவேறும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் நாளாகும்.விருச்சிகம்சந்திரன் உங்கள் ராசிக்கு நேர் எதிரே பயணம் செய்கிறார். மனதில் உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். புதிய வேலை விஷயமாக நல்ல செய்தி தேடி வரும். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.தனுசுசந்திரன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். மருந்து பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மனதில் சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கவனமும் நிதானமும் தேவை. சமூகத்தில் நன்மதிப்பு உண்டாகும்.மகரம்சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக யோசனையில் இருந்த ஒரு விசயத்தில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் பிரச்சினை வரலாம் கவனம் தேவை.கும்பம்சந்திரன் இன்று நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களுடன் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும்.மீனம்சந்திரன் இன்று மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். மனதில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அதிகரிக்கும். சொத்து விவகாரங்கள் முடிவுக்கு வரும். சகோதரர் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை திறமைக்கேற்ப அனுசரித்து செல்வதன் மூலம் லாபம் உண்டாகும்.'

No comments:

Post a Comment