+2 மாணவர்களுக்கு மதிப்பெண் இப்படி தான் கணக்கிடப்படும்... சிபிஎஸ்இ முறையை ஏற்ற உச்ச நீதிமன்றம் - ஆசிரியர் மலர்

Latest

18/06/2021

+2 மாணவர்களுக்கு மதிப்பெண் இப்படி தான் கணக்கிடப்படும்... சிபிஎஸ்இ முறையை ஏற்ற உச்ச நீதிமன்றம்

 


டெல்லி: 10 மற்றும் 11ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் +2 பருவத் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு சிபிஎஸ்இ +2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டிருந்தது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் பாதிப்பு மிக மோசமாக இருந்தது.இதன் காரணமாக முதலில் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐசிஎஸ்இ உட்பட பல்வேறு மாநிலங்களிலும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன.சிபிஎஸ்இ பொதுத்தேர்வு+2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்கப்படும் என்பதில் குழப்பம் நிலவியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் +2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் விளக்கியுள்ளது. மதிப்பீட்டுச் செயல்முறையை மற்றும் எழுத்துத் தேர்வு என இரண்டு பிரிவுகளாக சிபிஎஸ்இ பிரித்துள்ளது.மதிப்பெண் கணக்கிடும் முறைஎழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண் பின்வரும் முறையில் கணக்கிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது: 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் 5 பாடங்களில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற 3 பாடங்கள் எடுத்துக் கொள்ளப்படும். அந்த 3 பாடங்களின் மதிப்பெண்களிலிருந்து 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அடுத்து, 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்ணிலிருந்து 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இறுதியாக +2 பருவத் தேர்வுகள் உட்பட இதர தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களிலிருந்து 40% மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த மூன்று மதிப்பெண்களையும் கூட்டி மாணவருக்கு +2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல செய்முறைத் தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் சிபிஎஸ்இ தளத்திற்குப் பள்ளிகள் அளித்த மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.ஜூலை 31ஆம் தேதிக்குள்மேலும், இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு மூத்த முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட நான்கு ஆசியர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என சிபிஎஸ்இ தரப்பில் கூறப்பட்டுள்ளது. +2 தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ கூறியுள்ளது. இந்த முறையில் வழங்கப்படும் மதிப்பெண்களால் திருப்தியடையாத மாணவர்கள் விரும்பினால் தேர்வு எழுதலாம் என்றும் தேர்வு நடத்தக் கூடிய சூழல் அமையும்போது அவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது.பாடத்திட்டம்அதேபோல இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் என்று அழைக்கப்படும்தரப்பில் +2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் முறையை அறிவித்துள்ளது. அதில் மாணவர்களின் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, ப்ராஜக்டுகள், செயல்முறை தேர்வுகள், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பள்ளித் தேர்வுகளில் பெறப்பட்ட சிறந்த மதிப்பெண்கள், கடந்த ஆறு ஆண்டுகளில் பெற்ற சிறந்த மதிப்பெண் உள்ளிட்டவை கணக்கிடப்பட்டு +2 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனக் கூறியுள்ளது. இந்த முறைகளுக்கு உச்ச நீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459