TN-EMIS ல் கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகையினை சரியாக பதிவு செய்ய இயக்குநர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

21/12/2020

TN-EMIS ல் கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகையினை சரியாக பதிவு செய்ய இயக்குநர் உத்தரவு.

 IMG_20201220_204942


மாநில திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையம் அவர்களின் வழிக்காட்டுதல்களின்படி , “ கற்போம் எழுதுவோம் இயக்கம் - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 30.11.2020 முதல் கற்போர் மையங்கள் ( Leaners Literacy Centers ) துவங்கப்பட்டு முதற்கட்டமாக , ஒவ்வொரு கற்போர் மையத்திற்கும் குறைந்த பட்சம் 20 கற்போர்களை இலக்காகக் கொண்டு அந்தந்த தன்னார்வல ஆசிரியர்களின் வாயிலாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் , கற்போர் மையச் செயல்பாடுகள் , தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் கற்போரின் வருகை விவரங்களை தொடர்ந்து கண்காணித்திடும் பொருட்டு பார்வை ( 2 ) -இல் காணும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் ( சமக்ர சிக்ஷா ) திட்ட இயக்குநர் ஆலோசனைகளின் அடிப்படையில் TN - EMIS கைபேசி செயலியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகைப் பதிவு விவரங்களை பதிவேற்றம் செய்திடுமாறு பார்வை ( 3 ) இல் காணும் இவ்வியக்கக் கடிதத்தின்படி உரிய வழிக்காட்டுதல் நெறிமுறைகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.


 இதனைத் தொடர்ந்து இணைப்பில் கண்டுள்ள 18.12.2020 அன்றைய TN - EMIS அறிக்கையின்படி கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகை பதிவு விவரங்கள் குறைந்த அளவில் TN - EMIS கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது . எனவே இனிவரும் நாள்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கற்போர் மைய தன்னார்வல ஆசிரியர்கள் TN EMIS கைபேசி செயலியில் முன்குறிப்பிடப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்திட உரிய நடவடிக்கைகாக உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459