தமிழக மின்சார வாரியத்திற்கு தனியார் மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யும் உத்தரவு ரத்து - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழக மின்சார வாரியத்திற்கு தனியார் மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யும் உத்தரவு ரத்து

 


சென்னை: தமிழக மின்சார வாரியத்திற்கு தனியார் மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை தனியார் மூலம் ஒப்பந்த ஊழியா்களாக நிரப்புவது தொடா்பான ஒப்பந்தப் புள்ளிகளைத் தோ்வு செய்வதற்கு மின்வாரியம் ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், தனியார் மூலம் வேலைக்கு ஆள் நியமிக்கும் உத்தரவை ரத்து செய்வதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தமிழக மின்வாரியத்துக்கு தனியார் மூலம் 30 ஆயிரம் பேரை நியமிக்கும் உத்தரவு திரும்பப்பெறப்படுகிறது. மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, தொழிற்சங்கங்கள் திரும்பப் பெற்றால், ஐந்து நாட்களுக்குள் 10 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகள் கொடுக்கப்படும். போராட்டம் நடத்திக் கொண்டிருக்காமல் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். தமிர்நாடு மின்வாரியம் ஒரு போதும் தனியார் மயமாகாது. இவ்வாறு அவர் கூறினார்.

1 comment: