ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம். நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம். நீட்டிப்பு

 


சென்னை, 

நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட) சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மை தேர்வை 4 முறை நடத்த மத்திய கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. நீட் தேர்வை போல 13 மொழிகளில் ஜே.இ.இ. தேர்வு நடைபெற உள்ளது.

அதன்படி அந்த தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. 16-ந்தேதி (நேற்று) முதல் அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 16-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகவே இந்த தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்பட உள்ளது.
தேர்வு பிப்ரவரி மாதம் 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலும், மார்ச் 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையிலும், ஏப்ரல் 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும், மே மாதம் 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும் நடக்க உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் தேர்வு நடைபெற இருக்கிறது. அந்த வகையில் காலை 9-12 மணி வரையிலும், மாலை 3-6 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment