கேரளாவில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச்சில் தொடக்கம் - ஆசிரியர் மலர்

Latest

18/12/2020

கேரளாவில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச்சில் தொடக்கம்

 


கேரளாவில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பினராயி விஜயன்

கேரளாவில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு பின்னர் பினராயி விஜயன் கூறியதாவது:-

கேரளாவில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

பொதுத்தேர்வுக்கு முன்னர் நடைபெறும் செய்முறை பயிற்சி தேர்வுகள் ஜனவரி மாதத்திலேயே நடத்தி முடிக்கப்படும். இதற்கு வசதியாக, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

ஏற்கனவே ஜூன் 1-ந் தேதி முதல் நடந்து வரும் ஆன்லைன் வகுப்புகளில் எடுக்கப்பட்ட பாடங்கள் தொடர்பான மறு மதிப்பீட்டு பயிற்சி வகுப்புகளும் அப்போது நடைபெறும். ஜனவரி 1-ந்தேதி முதல் நடத்தப்படும் வகுப்புகளில் 50 சதவீத மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பள்ளிகளை 2 ஷிப்டுகளாக நடத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோல மருத்துவ கல்லூரிகளில் 2-ம் ஆண்டு வகுப்புகளை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ கல்வி இயக்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459