முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை 5 நாளில் வழங்க வேண்டும்: உயர்கல்வித் துறை அறிவுறுத்தல் - ஆசிரியர் மலர்

Latest

02/11/2020

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை 5 நாளில் வழங்க வேண்டும்: உயர்கல்வித் துறை அறிவுறுத்தல்

 


உயர்கல்வி படிக்கும் மாணவர் களுக்கான முதல் தலைமுறை பட்ட தாரி சான்றிதழ் வழங்குவதில் நில வும் சிக்கல்களுக்கு உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் க.கணேசன், அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர் களுக்கு 2010-11-ம் கல்வி ஆண்டு முதல் கல்விக்கட்டணம் முழு வதும் தமிழக அரசு சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் கோரி மாணவர் கள் விண்ணப்பித்தால் அதன் மீது தகுந்த விசாரணை மேற்கொண்டு 5 நாட்களில் சான்றிதழ் வழங்கவும், அதில் எவ்வித காலதாமதம் இருக் கக் கூடாது எனவும் வருவாய்த் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் பட்டயப் படிப்பு களை, பட்டப்படிப்புக்கு இணை யாக கருத இயலாது. எனவே, இது குறித்து வட்டாட்சியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். மேலும், விண்ணப்பிக் கும் மாணவர்களின் உடன்பிறந்த வர்கள் கல்லூரிகளில் பட்டப் படிப்பை படித்தால் வட்டாட்சியர்கள் முதல் தலைமுறை பட்டதாரி சான்று வழங்க மறுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே, சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் மாணவரின் குடும் பத்தில் யாரேனும் பட்டப்படிப்பை படித்து அதை முடிக்காமல் விட்டு விட்டாலும் அல்லது பட்டப்படிப்பை படித்துக் கொண்டிருந்தாலும் அந்த நபர் பட்டதாரி இல்லாத குடும்பத் தைச் சார்ந்தவர் என்றுதான் கருத வேண்டும். இதுதொடர்பாக வட் டாட்சியர்களுக்கு உரிய அறிவுறுத் தல்களை வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459