மாணவர்களுக்கு இன்று இலவச புத்தகம்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

02/11/2020

மாணவர்களுக்கு இன்று இலவச புத்தகம்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு


 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் இன்று வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நவம்பர் மாதம் இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் மட்டும் தொடங்க உள்ளன. கீழ் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டன. 


இதையடுத்து, இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கினால்தான் அரையாண்டுத் தேர்வுக்கான பாடங்களை மாணவர்கள் படிக்க முடியும். இதற்கிடையே, நவம்பர் 16ம் தேதி முதல் உயர் வகுப்புகளுக்கு பாடம் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கீழ் வகுப்புகளுக்கு எப்போது நேரடியாக பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதையடுத்து, இன்று பாடப்புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து, இன்று சுமார் 3 கோடி அளவிலான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459