"தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 29,418 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் ஒரு லட்சம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இந்த லட்சணத்தில் மாணவர்களுக்கு தரமான கல்வி எங்கிருந்து கிடைக்கும் முதலமைச்சர் அவர்களே?
விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாதால் மாநிலம் முழுவதும் மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை திசை திருப்புவதற்காகத் தான் இந்த விளம்பரப்படத்தை (தேவா, ஜீவா) நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.
இத்தகைய விளம்பரப்படங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது. தேர்தலுக்குப்பின் விளம்பரப் படங்களில் நடித்துதான் நீங்கள் பொழுதைக் கழிக்க வேண்டியிருக்கும்."
– பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்


No comments:
Post a Comment