புதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

புதிய கல்விக் கொள்கையில் 18 படிப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க உத்தரவு.

 


புதிய கல்விக் கொள்கைப்படி தயாரிக்கப்பட்ட, 18 ஆன்லைன் படிப்புகளை, அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க வேண்டும்' என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுஉள்ளது. 


மத்திய அரசு சார்பில், புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்துஉள்ளது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், மத்திய அரசு தயாரித்துள்ள, 18 வகை ஆன்லைன் படிப்புகளை, அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க வேண்டும் என, தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக, தமிழக பள்ளி கல்வியின், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை:தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் வழியே, புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், 18 வகை படிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.அவற்றை ஒன்று முதல் எட்டு வரையில் பாடம் எடுக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மூன்று மாதங்களுக்குள் ஆன்லைனில் படிக்க வேண்டும். அதன்பின், இதற்கு ஆசிரியர்களுக்கு தேர்வு வைத்து சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment