பி.எட்., கல்லுாரிகளில் முறைகேடு எதிரொலி : நடவடிக்கை எடுக்க தயாராகும் பல்கலைக்கழகம் - ஆசிரியர் மலர்

Latest

14/10/2020

பி.எட்., கல்லுாரிகளில் முறைகேடு எதிரொலி : நடவடிக்கை எடுக்க தயாராகும் பல்கலைக்கழகம்


 பி.எட்., கல்லுாரிகளில், வகுப்பு எடுப்பதில் முறைகேடு நிகழாமல் தடுக்கும் வகையில், மாதம் இரு முறை அறிக்கை தர, கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில், 700க்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள் சிலவற்றில், கடந்த ஆண்டுகளில், மாணவர்கள் கல்லுாரிக்கே வராமல், அவர்களுக்கு வருகைப் பதிவு அளித்ததாக புகார்கள் எழுந்தன. தற்போது, கொரோனா காரணமாக கல்லுாரிகள் திறக்கப்படவில்லை.'ஆன்லைன்' வகுப்பு கள் நடத்த வேண்டும் என, பல்கலை அறிவுறுத்தியுள்ளது. இந்த வகுப்பிலும் மாணவர்கள் பங்கேற்காமல் உள்ளதாகவும், கல்லுாரிகள், அதை கண்டு கொள்வதில்லை என்றும், புகார் எழுந்தது.


இந்த முறைகேட்டை தடுக்க, அனைத்து கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் பாலகிருஷ்ணன் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:அரசின் உத்தரவுப் படி, ஆகஸ்ட், 3 முதல் கல்லுாரிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனால், வகுப்புகளின் விபரம், பங்கேற்கும் மாணவர்களின் தினசரி வருகைப் பதிவேடு குறித்த ஆவணங்களையும், ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் குறித்த விபரங்களையும், கல்லுாரிகள் தர வேண்டும்.


வகுப்புகளின் போது சேகரிக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் 'ஸ்க்ரீன் ஷாட்' ஆதாரங்களையும், மாதம் இரு முறை அறிக்கையாக, இ - மெயில் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459