தொடக்கக் கல்வி - 2020-21 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - ஆசிரியர் மலர்

Latest

04/09/2020

தொடக்கக் கல்வி - 2020-21 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!






புதிய மாணவர் சேர்க்கை 

பிற மாநிலத்திலிருந்து / ஒன்றாம் வகுப்பில் முதன்முறையாக சேர்க்கை ஆகும் மாணவர்களுக்கு புதிய Student Profile உருவாக்கப்பட வேண்டும்.

> பெற்றோர்களால் வழங்கப்பட்ட ஆவணங்கள் 

 தகவல்களின் அடிப்படையில் முதற்கட்ட விவரங்களை உள்ளீடு செய்தல் வேண்டும்

கூடுதலாக தேவைப்படும் விவரங்களைப் பின்னர் பெற்று உள்ளீடு செய்தல் வேண்டும்

 ஏதேனும் ஒரு பள்ளியில் ஏற்கனவே பயின்று வரும் மாணவர்களின் மாறுதல் சேர்க்கை 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கு அடுத்தடுத்த வகுப்புகளுக்கு Promotion செய்தல் வேண்டும் . அதாவது 1 ஆம் வகுப்பு மாணவர்களை 2 ஆம் வகுப்பிற்கும் , 2 ஆம் வகுப்பு மாணவர்களை 3 ஆம் வகுப்பிற்கும் , EMIS இணையதளத்தில் நிலை உயர்த்த வேண்டும்

ஏதேனும் ஒரு பள்ளியில் ஏற்கனவே சேர்க்கை செய்யப்பட்டு பயின்று வரும் மாணவர்களில் யாரேனும் வேறு பள்ளிகளில் பயில்வதற்காக மாற்றுச் சான்றிதழ்கள் கோரும் பட்சத்தில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை ( EMIS இணையதளத்தில் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் சார்ந்த தற்போதைய பள்ளியால் மாற்றுச் சான்றிதழ் நிரப்பப்படல் வேண்டும்

 உரிய காரணங்களைக் குறிப்பிட்டு தற்போதைய பள்ளி இம்மாணவர்களின் விவரங்களை Common Pool க்கு மாற்றுதல் வேண்டும்.

 சேர்க்கை மேற்கொள்ளும் புதிய பள்ளியானது இம்மாணவர்களின் விவரங்களை EMIS Id / ஆதார் எண் / கைபேசி எண் ஆகியவற்றினைக் கொண்டு Common Pool லில் இருந்து தேடி எடுத்தல் வேண்டும்.

அவ்வாறு Common Poololdo இருந்து தேடி எடுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் புதிய பள்ளியானது மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு மாணவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட EMIS Id எண் உருவாக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு , தமிழ்நாட்டிற்குள் மாறுதலில் சேர்க்கையாகும் எந்த மாணவருக்கும் புதிதாக EMIS Id . ஐ எந்த பள்ளியும் உருவாக்கித் தருதல் கூடாது.

       -  தொடக்கக் கல்வி இயக்குநர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459