இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

சென்னை,
டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை-2021 பருவத்தில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு ‘கமாண்டன்ட் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன், உத்தரகாண்ட்-248003’ என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வழியாக எழுத்து மூலம் விண்ணப்பித்து, அதற்கான காசோலையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.rimc.gov.in என்ற இணையதளம் மூலமும் அதற்கான பணத்தை செலுத்தி பெறலாம்.< பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்காநகர், சென்னை – 600003 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இதற்கான எழுத்து தேர்வு வருகிற டிசம்பர் 1, 2-ந் தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் இந்த தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு www.rimc.gov.in என்ற ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியின் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment