மேல்நிலை மற்றும் பாலிடெக்னிக் வகுப்புகள் எப்போது தொடங்கப்பட உள்ளது? நீதிமன்றம் கேள்வி - ஆசிரியர் மலர்

Latest

22/08/2020

மேல்நிலை மற்றும் பாலிடெக்னிக் வகுப்புகள் எப்போது தொடங்கப்பட உள்ளது? நீதிமன்றம் கேள்வி


சென்னை,
கொரோனா பரவல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்தது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத ‘ஹால் டிக்கெட்’ பெற்றிருந்த தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக்கோரி, சென்னை ஐகோர்ட்டில், கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் வருகிற செப்டம்பர் 21-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற இருப்பதாகவும், பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையும் வருகிற 24-ந்தேதி தொடங்க உள்ளதால், தனி தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உத்தரவிடவேண்டும். அதுவரை, மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையை தள்ளி வைக்கவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர், “மேல்நிலை மற்றும் பாலிடெக்னிக் வகுப்புகள் எப்போது தொடங்கப்பட உள்ளது? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை 25-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459