சுதந்திர தின விழா பள்ளிகளில் நடக்குமா? : அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சுதந்திர தின விழா பள்ளிகளில் நடக்குமா? : அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில், ஆக., 15ல், சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்து, முதல்வர் தான் முடிவு செய்வார்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் கூறியதாவது:கொரோனா தொற்று சமயத்தில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், ஆக., 15ல், சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்து, முதல்வர் தான் முடிவு செய்வார்.தமிழகத்தில், பள்ளிகள் திறப்பு குறித்து, பெற்றோர் - ஆசிரியர் சங்கம், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. 

கொரோனா தொற்று சூழலில், தற்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை.படிப்படியாக தொற்று குறைந்த பின், மீண்டும் மக்களின் கருத்துகளை அறிந்து, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, வகுப்பு வாரியாக, காலணி மற்றும் ஷூ வழங்குவது குறித்து, ஆக., 10ல் முதல்வர் முடிவு செய்து அறிவிப்பார். 10ம் வகுப்பினருக்கு, முதல்வர் தேதி அறிவித்த பின், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a comment