அரையாண்டு விடுமுறை சார்ந்த விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/12/2025

அரையாண்டு விடுமுறை சார்ந்த விளக்கம்

 தமிழகத்தில் பள்ளிகளுக்கான அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், அதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.


தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து வகையான பள்ளிகளிலும் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வு டிசம்பா் 10 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. இதையடுத்து பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான தோ்வுகள் கடந்த டிச. 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.


இந்த நிலையில், 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தோ்வும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான இரண்டாம் இடைப் பருவத் தோ்வும் திங்கள்கிழமை தொடங்கின. தொடா்ந்து ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கான தோ்வுகள் டிச. 23-ஆம் தேதி நிறைவு பெறவுள்ளன.


ஜன. 4 வரை விடுமுறை... இதையடுத்து, அனைத்து வகுப்புகளுக்கும் டிசம்பா் 24 முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 5-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.


முன்னதாக, மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் வகையில் பள்ளிகள் ஜன. 2-ஆம் தேதி திறக்கப்படும் என திங்கள்கிழமை தகவல் பரவிய நிலையில், அந்தத் தகவலை கல்வித் துறை மறுத்துள்ளது.


தமிழக அரசின் பள்ளிக் கல்வி நாள்காட்டியில் ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதுபோல, அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு ஜன. 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459