CA தேர்வு ரத்து - ஐசிஏஐ - ஆசிரியர் மலர்

Latest

05/07/2020

CA தேர்வு ரத்து - ஐசிஏஐ

சென்னை: CA தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐசிஏஐ அறிவித்துள்ளது. இந்திய முழுவதும் கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் அனைத்து விதமான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. சில முக்கியம் வாய்ந்த தேர்வுகள் மட்டும் ரத்து செய்யாமல் ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வுகளை ரத்து செய்வதோ அல்லது ஒத்திவைப்பதோ அந்த அந்த மாநில அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கையில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பலவிதமான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்தும் உள்ளது. மேலும் ஆண்டு தோறும் இருமுறை CA தேர்வை இந்தியப் பட்டயக் கணக்காளர்களுக்கான நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மே மாதம் நடைபெற இருந்த தேர்வு கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதனையடுத்து இந்த தேர்வு ஜூலை 29-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தேர்வை ரத்து செய்வதாக ஐசிஏஐ அறிவித்துள்ளது.CA தேர்வு எழுத இந்திய முழுவதும் உள்ள மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுடன் சேர்த்து எழுதிக் கொள்ளலாம் என ஐசிஏஐ கூறியுள்ளது. மேலும் இந்த தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களைத் மாணவர்கள் www.icai.org என்கிற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். மே மாதம் நடத்தத் திட்டமிட்டு இருந்த CA தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459