வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் உணவுகளை எப்படி தயாரிக்கலாம்? - ஆசிரியர் மலர்

Latest

05/07/2020

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் உணவுகளை எப்படி தயாரிக்கலாம்?


வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் உணவுகளை எப்படி தயாரிக்கலாம்?- வேளாண் அறிவியல் மைய பேராசிரியர்கள் விளக்கம்!

 நாம் அன்றாடம் உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வைட்டமின் ‘சி’ நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் நெல்லிக்காயில் வைட்டமின் ‘சி’ அதிகளவு காணப்படுகிறது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’ காணப்படுகிறது. 
இது ஆரஞ்சு பழச்சாறில் இருப்பதை விட 20 மடங்கு அதிகம். இப்பழத்தை காயவைத்து வற்றல் தயாரித்தாலும் வைட்டமின் ‘சி’ அதிகம் சேதமாவதில்லை . இந்த வைட்டமின் ‘சி’ ஆனது இயற்கை நோய் எதிர் காரணியாக(ஆண்டியாக்சிடன்ட்)செயல்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. நெல்லிக்காயில் அதிகளவு புளிப்பு சுவையுள்ளதால் அப்படியே சாப்பிட இயலாது. நெல்லிக்கனியைப் பதப்படுத்தி பல்வேறு பதார்த்தங்கள் தயாரிக்கலாம்.
நெல்லிக்கனியில் இருந்து தயாரிக்கக்கூடிய உணவு வகைகளை பற்றி விளக்குகிறார்கள் மதுரை வேளாண்மை கல்லூரி வளாகத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் மையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செல்வி ரமேஷ், பேராசிரியர் ஆரோக்கியமேரி. ‘‘வெயில் காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்க அனைவரும் அதிகளவு நீர் பருக வேண்டும். இச்சமயத்தில் குழந்தைகள் ஜூஸ் விரும்புவர். 

அதனால், நெல்லிக்காயிலிருந்து ஜூஸ் மற்றும் ஸ்குவாஷ் போன்ற உணவுகளை தயாரித்து வழங்கலாம். 

நெல்லிக்காய் ஜூஸ்:* 

 இதற்கு தேவையான மொருட்கள்: 700 கிராம் நெல்லிக்காய் கூழ், 200 மில்லி எலுமிச்சைச் சாறு, 50 மில்லி இஞ்சிச்சாறு, 1 கிலோ சீனி, 5 கிராம் சிட்ரிக் அமிலம், 2 லிட்டர் தண்ணீர் இவற்றைக் கொண்டு நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்கலாம். செய்முறை: இதற்கு நெல்லிக்காயை நன்றாக தண்ணீரில் கழுவி விதை நீக்க வேண்டும். அதை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு மிக்ஸியில் போட்டு நன்றாக அறைத்து பழக்கூழ் தயார் செய்ய வேண்டும். இஞ்சிச்சாறு மற்றும் எலுமிச்சை சாறை இதனுடன் கலந்து கொள்ள வேண்டும். தண்ணீரில் சர்க்கரை மற்றும் சிட்டிக் அமிலம்/எலுமிச்சை சாறு பாகு தயாரித்து பின்துணி கொண்டு வடித்துக் வைத்துக் கொள்ள வேண்டும். 

நெல்லிக்காய் கூழையும், சர்க்கரைக் கரைசலையும் கலந்து அடுப்பில் வைத்து 80 சென்டிகிரேடு வரை அல்லது ரசம் பொங்கி வருவது போன்ற நிலை வரைக்கும் கொதிக்க விட வேண்டும். பின் கிருமி நீக்கம் செய்யப்பட்ட குப்பிகளில் ஊற்றி சோடா குப்பி மூடிகொண்டு மூட வேண்டும். 

நெல்லி ஸ்குவாஷ்:

இதுபோல், நெல்லி ஜாம், நெல்லி ஸ்குவாஷ் போன்றவையும் தயாரிக்கலாம். நெல்லி ஸ்குவாஷ் தயாரிக்க ஒரு கிலோ நெல்லிக்காய் கூழ், 2 கிலோ சர்க்கரை, 1 லிட்டர் தண்ணீர், 1 தேக்கரண்டி சிட்டிக் அமிலம்/எலுமிச்சை சாறு எடுது்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காயை 2 சதவீதம் உப்புக் கலந்த தண்ணீரில் ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உப்பு கலந்த தண்ணீரில் ஊற வைத்த நெல்லிக்காயை கழுவி விட்டு இட்லி வேக வைப்பது போல் 2 நிமிடம் வேக வைத்து கொட்டையை நீக்கவிட வேண்டும்.
பின்பு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவுதண்ணீர், சர்க்கரை மற்றும் சிட்டிரிக் அமிலம், எலுமிச்சை சாறு எடுத்துக் கொண்டு சர்க்கரை நன்கு கரையும் வரை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி சர்க்கரை பாகு தயார் செய்ய வேண்டும். சர்க்கரை பாகை வெள்ளைத்துணியில் வடிகட்டி நன்று ஆறவைக்க வேண்டும். இந்த சர்க்கரைப் பாகுடன் பழக்கூழ் கலந்து வடிகட்ட வேண்டும். உயர்ந்த பாட்டிலின் மேல் பாகத்தில் அரை அல்லது ஒரு அங்குலம் இடைவெளி இருக்குமாறு பழச்சாறு நிரப்பி பாட்டிலை காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும். பரிமாறுவதற்கு முன் ஒரு பங்கு ஸ்குவாஷ் உடன் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து பரிமாற வேண்டும்
. *நெல்லி ஜாம்:* அதுபோல் நெல்லி ஜாம் தயாரிக்க நெல்லிக்காய் கூழ் 1 கிலோ, 1 கிலோ சர்க்கரை 1 கிலோ சிட்ரிக் அமிலம்/எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காயை நன்றாக நீரில் கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு நன்றாக கூழாக்க வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து அத்துடன் சர்க்கரையும் சிட்டிரிக் அமிலத்தையும் சேர்த்து கிளறிக் கொண்டே நன்றாக சூடுபடுத்த வேண்டும். இப்பழக்கூழ் கரண்டியில் இருந்து கீழே விழும்போது தகடுகளாக விழும். இந்நிலையை சரியான பதம் என கூறுகிறோம்
இந்த பதம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவிட வேண்டும். வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் பாதி அளவிற்கு எடுத்து கொண்டு அதில் பழச்சாறு நிரப்பி மூடப்பட்ட குப்பிகளை அடுப்பில் வைத்து கொதிக்க வேண்டும். கொதிநீரில் குப்பிகளை 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பானத்தினை அப்படியே பருகலாம். இதுபோல் நெல்லி சுபாரி, தேன் நெல்லி தயாரித்தும் சாப்பிடலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459