நாளை முதல் முகக்கவசம் அணிந்து வருபவா்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் - ஆசிரியர் மலர்

Latest

05/07/2020

நாளை முதல் முகக்கவசம் அணிந்து வருபவா்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும்

சென்னை: வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வருவோா் முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டும்தான் எரிபொருள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
இது திங்கள்கிழமை (ஜூலை 6) முதல் நடைமுறைக்கு வருகிறது..
இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.பி.முரளி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி::
தமிழகத்தில் ஜூலை 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் உள்ள நான்கு (ஜூலை 5 ,12, 19, 26) ஞாயிற்றுகிழமைகளிலும் தமிழகம் முழுவதும் தளா்வற்ற முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது, சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும்
. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களும் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்களுக்கான பெட்ரோல், டீசல் விற்பனை செய்யாது.

தமிழக அரசு அறிவித்துள்ளபடி, அவசரத் தேவைகளுக்காகவும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் (ஆம்புலன்ஸ் , பால் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை) பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் குறைந்த எண்ணிக்கையிலான
விற்பனையாளா்களைக் கொண்டு இயங்கும்.
முகக் கவசம்: தமிழகத்தின் அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு வருகின்ற வாடிக்கையாளா்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். முகக்கவசம் அணிந்து வருபவா்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும். இந்த முறை வரும் திங்கள்கிழமை (ஜூலை 6) முதல் அமலாகிறது என்று தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459