இப்படியும் நடக்குமா.. காருக்குள் விளையாடிய 2 குழந்தைகள் பலி.. கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

இப்படியும் நடக்குமா.. காருக்குள் விளையாடிய 2 குழந்தைகள் பலி.. கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே, காருக்குள் விளையாடிய 2 குழந்தைகள், மூடிய கதவை திறக்க முடியாமல் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள குலதீபமஙகலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் தனக்கு சொந்தமான காரை பழுதான நிலையில் இருந்ததால் கடந்த ஒரு வருடமாக தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று மதியம் அதே பகுதியை சேர்ந்த அய்யனார் மகள் வனிதா(3), ஏழுமலை மகள் ராஜி(7) ஆகிய இரண்டு பெண் குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ராஜாவின் காருக்குள் சென்று விளையாடியுள்ளனர். ஆனால் சுமார் 2 மணி நேரமாகியும், அவர்கள் வீடு திரும்பவில்லையாம். இதன்பிறகுதான் பெற்றோர் தேட ஆரம்பித்துள்ளனர்.காருக்குள் குழந்தைகள்நீண்ட நேரமாக அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் குழந்தையை பற்றிய விவரம் தெரியாமல் பதற்றமடைந்தனர். அப்போதுதான், வீட்டின் அருகே நின்ற காருக்குள் பார்த்துள்ளனர். காருக்குள் இரு குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்தனர். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கார் கதவை திறந்து குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.கதவு லாக்ஆனால் அந்த குழந்தைகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். காரின் உள்ளே விளையாடியபோது சைல்ட் லாக் காரணமாக, கார் கதவு தானாக மூடியிருக்கலாம். அங்கேயிருந்து கத்திப் பார்த்தும் கண்ணாடிகள் தூக்கிவிடப்பட்டிருந்ததால், வெளியே கேட்டிருக்காது என தெரிகிறது. இந்த நிலையில்தான், காற்று இல்லாமல், பரிதாபமாக அந்த குழந்தைகள் பலிாகியுள்ளனர்.அதிர்ச்சிஇதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் இருவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஏன் இப்படிகாரில் ஏசி இயக்கப்பட்டால் காற்று உள்ளே வரும். ஆனால் கார் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இருந்ததால்தான், அந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கார் சாவிகளை குழந்தைகளிடம் கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும், குழந்தைகளை கார்களுக்குள் ஏறி விளையாட அனுமதிக்க கூடாது என்கிறார்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள்.

No comments:

Post a comment