ஒரு மணி நேரத்துக்கு சுமார் 2,600 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு ‌ - ஆசிரியர் மலர்

Latest

23/07/2020

ஒரு மணி நேரத்துக்கு சுமார் 2,600 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு ‌


கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதன்மையானது. அந்நாட்டு அதிபர் ட்ரம்ப்பின் அலட்சியம் காரணமாக இவ்வளவு அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என சுகாதார நிபுணர்கள் உட்பட பலரும் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றனர். பாதிப்பு எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதன் உச்சத்தை அடைந்து வந்தது. எனினும், முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளி போன்ற வழிமுறைகளை அதிபர் ட்ரம்ப் கட்டாயமாக்காமல் இருந்து வருகிறார். இதுதொடர்பான விவாதங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா வைரஸ் – அமெரிக்கா அமெரிக்காவில் கொரோனா வைரஸ் முதல் பாதிப்பு கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி உறுதியானது. இதையடுத்து படிப்படியாக அதிகமாகி பாதிப்படைந்தவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில்தான் இருந்து வருகிறது. அமெரிக்காவில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை அடைய சுமார் 98 நாள்கள் ஆன நிலையில், அதிலிருந்து இரண்டு மில்லியனாகப் பாதிப்பு எண்ணிக்கை உயர சுமார் 43 நாள்களே ஆகின. இதையடுத்து, சுமார் 27 நாள்களில் 3 மில்லியன் பாதிப்பு எண்ணிக்கையை அமெரிக்கா அடைந்தது. இந்த நிலையில், நிமிடத்துக்கு 43 பேர் பாதிப்பு என 4 மில்லியன் எண்ணிக்கையை அடைய சுமார் 16 நாள்கள் மட்டுமே ஆகின. அதாவது, அமெரிக்காவில் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 2,600 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459