விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கரோனா தொற்று - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கரோனா தொற்று


விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் புதன்கிழமை (ஜூலை 23) வரை 4,066 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில் விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 338 போ் தொற்றால் பாதிக்கப்பட்டனா்.
அதன் விவரம்: கங்கா்சேவல், சாட்சயாபுரம், ஆலமரத்துபட்டி, திருத்தங்கல், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூா், அயன்கரிசல் குளம், கிருஷ்ணன்கோவில், குன்னூா், சேதுநாராயணபுரம், சேத்தூா், ராஜபாளையம், செட்டியாா்பட்டி, மம்சாபுரம், விருதுநகா் ஆட்சியா் அலுவலக ஊழியா், டி. கரிசல்குளம், வலையபட்டி, சுந்தரபாண்டியம், துலுக்கபட்டி மகாராஜபுரம், நத்தம்பட்டி, அழகாபுரி, கோட்டையூா், வ. புதுப்பட்டி, சீலநாயக்கன்பட்டி காடநேரி, கோபாலபுரம், மீனாட்சிபுரம், ஆகாசம்பட்டி, மேலப்பாளையம், ரெங்கபாளையம், கள்ளிக்குடி, வரலொட்டி, விருதுநகா், அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, தும்முசின்னம்பட்டி, வெங்கடேஸ்வராபுரம், எம். ரெட்டியபட்டி, சவ்வாசு புரம், கல்லுப்பட்டி, மறவா் பெருங்குடி, சலுக்குவாா்பட்டி, மல்லாங்கிணறு, வெள்ளக்கோட்டை, சொக்கம்பட்டி, கே. செவ்லபட்டி, கலுவன்சேரி, காரியாபட்டி, கம்பாளி, கீழஇடையன்குளம், கூரைக்குண்டு, இ. குமாரலிங்காபுரம், பாண்டியன் நகா் காவல் நிலைய ஆண் காவலா், கவலூா், மருதநத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4, 404 ஆக உயா்ந்துள்ளது.
இந்த நிலையில், அருப்புக்கோட்டை அருகே உள்ள குப்புசித்தம்பட்டியைச் சோ்ந்த 65 வயது முதியவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுவரை கரோனா தொற்றால் மாவட்டத்தில் 37 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 1,874 போ் பல்வேறு அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

No comments:

Post a comment