கொரோனா பிடியில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள்! - ஆசிரியர் மலர்

Latest

 




02/06/2020

கொரோனா பிடியில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள்!


சென்னை  தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கும் கரோனா தொற்று பரவி வருவது ஊழியர்க ளிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது .இதனிடையே , பணிக்கு வரும் ஊழியர்கள் அனைவருக் கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதி கரிக்கும் வகையில் மாத்திரை களை வழங்க தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.

தமிழக அரசின் இதயமாகத் திக ழும் தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது . பிரதான கட்டடம் மூன்று தளங்களையும் , நாமக்கல் கவிஞர் மாளிகை பத்து தளங்க ளையும் கொண்டுள்ளன
.

இதில் பிரதான கட்டடத்தில் சட்டப் பேரவை , முதல்வர் அலுவலகம் , சட்டப்பேரவைச் செயலகம் , பேரவைத் தலைவர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங் களும் , நிதி , உள் துறை , வருவாய் உள்ளிட்ட முக்கிய துறைகளும் செயல்பட்டுவருகின்றன .

பத்து தளங்களைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துத் துறைகளின் செயவா ளர்களின் அலுவலகங்கள் , அவர் களது துறைகளின் பிரிவு அலு வலகங்கள் இயங்கி வருகின்றன . மொத்தமாக 5 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

கரோனா அச்சம் : கடந்த மார்ச் 24 - ஆம் தேதியுடன் சட்டப் பேர வைக் கூட்டம் நிறைவடைந்த தைத் தொடர்ந்து , 144 தடை உத்த ரவு , பொதுமுடக்கம் உள்ளிட்ட உத்தரவுகளை மத்திய , மாநில அரசுகள் பிறப்பித்தன .

இதனால் ,| தலைமைச் செயலகத்தின் பெரும் பாலான துறைகள் மூடப்பட்டன . அத்தியாவசியத் துறைகளான சுகாதாரம் , வருவாய் , நகராட்சி நிர்வாக உள்ளிட்ட ஒரு சில துறை கள் மட்டுமே குறைவான பணியா ளர்களைக் கொண்டு இயங்கின . இந்த நிலையில் , கடந்த 15 நாள் களாக சுழற்சி முறையில் 50 சதவீத ஊழியர்களைக் கொண்டு தலை மைச் செயலகம் இயங்கி வருகி றது . அதாவது , தினமும் 2,500 பேர் பணிக்குவருகின்றனர்.

அவர்களில் நாமக்கல் கவிஞர் மாளி கையின் ஒவ்வொரு தளத்திலும் , சுமார் 2 பேர் முதல் 5 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது
. சட்டப்பேரவை யின் பொது கணக்குக் குழு பிரிவு , பொதுத் துறை துணைச் செயலாளர் உள்ளிட்டோருக்கும்  கரோனா உறுதியாகியுள்ளது .

இடநெருக்கடி நாமக்கல் கவிஞர் மாளிகையின் ஒவ்வொரு தளத்திலும் மூன்று துறை கள் செயல்பட்டு வருகின்றன . துறைக்கு 150 பேர் வீதம் , ஒருதளத்தில் 450 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

இதனால் , கடும் இடநெ ருக்கடி ஏற்பட்டு தனிநபர் இடை வெளியைப் பின்பற்ற முடியாத நிலை ஏற்படுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459